திரைப்படம்:- கவிக்குயில்;
ரிலீஸ்:- 29th ஜூலை 1977;
இசை:- இளையராஜா;
பாடலாசிரியர்:- பஞ்சு அருணாச்சலம்;
பாடியவர்:- சுஜாதா மோகன்;
நடிப்பு:- ஸ்ரீதேவி;
தயாரிப்பு:- S.P. தமிழரசி;
கதை:- R. செல்வராஜ்;
டைரக்சன்:- தேவராஜ் மோகன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
மாமர தோட்டத்து நிழலில் ஒரு மாலை பொழுதினிலே
அந்த மாறன் அருகினிலே பூந்தென்றல் கமழ்ந்து வர
நான் என்னை மறந்தேனே
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
கூந்தலில் வாசனை மலர்கள் அவன் சூடும் அழகினிலே
என்ன சுகமோ தெரியவில்லை
என் தோளை தொடுவதென்ன பொன் மேனி சிலிர்ப்பதென்ன
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
மார்கழி மாதத்து பனியில் என் தேகம் கொதிப்பதென்ன
அவன் பார்வை குளிர்வதென்ன ஒரு பாசம் பிறப்பதென்ன
அங்கு நானம் தடுப்பதென்ன
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
மனசோலையின் காவியமே உன்னை நாளும் நாளும் வேண்டுகிறேன்
காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ
Download
1 comment:
Early days of Ilayaraja...Really awesome
Post a Comment